undefined

  நயினார் நாகேந்திரன் பிரச்சாரத்துக்கு கடும் கட்டுப்பாடுகளுடன்  அனுமதி!

 


 
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன். இவரது  பிரசாரத்துக்கு நிபந்தனையுடன் காவல்துறையினர் அனுமதி வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  கரூர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து, அரசியல் கூட்டங்கள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கும்வரை புதிதாக எந்த கூட்டத்துக்கும் அனுமதி வழங்கப்படாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம் அளித்திருந்தது.  


இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் 'தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்' சுற்றுப்பயணத்துக்கு நிபந்தனைகளுடன் காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.


மதுரையில் நடைபெறும் இந்த  விழாவில், பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா பங்கேற்கிறார்.  இவர் அக்டோபர் 12ம் தேதி பாஜக தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரச்சாரத்தை  தொடங்கி வைக்கிறார்.  பிரச்சாரத்துக்கு வரும் மக்களுக்கு குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், குழந்தைகள், கர்ப்பிணிகள் கலந்து கொள்ளக்கூடாது என கடும் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டுள்ளன.  அக்டோபர் 12ம் தேதி தொடங்கும் நயினார் நாகேந்திரன்  முதல்கட்ட சுற்றுப்பயணம், நவம்பர்  17 ம் தேதி நெல்லையில் நிறைவடைகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?