நவராத்திரி விழா... பெண் குழந்தைகளின் பாதங்களை கழுவி ‘கன்யா பூஜை’ செய்த உ.பி. முதல்வர்! 

 

 

நவராத்திரி விழாவை முன்னிட்டு துர்க்கையின் வடிவமான பெண் குழந்தைகளின் பாதங்களை கழுவி உ.பி.முதல்வர் ‘கன்யா பூஜை’ செய்தார். 

வட மாநிலங்களில் நவராத்திரி விழா தினந்தோறும் சிறப்பு பூஜைகள், உற்சவங்களுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக நவராத்திரி விழாவின் 9-வது நாளில்‘கன்யா பூஜை’ நடத்தப்படுகிறது. 

கன்யா பூஜையின்போது கோவில்களிலும், வீடுகளிலும் 2 முதல் 10 வயது வரையிலான பெண் குழந்தைகளை துர்க்கையின் வடிவமாக கருதி, அவர்களின் பாதங்களை கழுவி பூஜை செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. 

இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலில் நடைபெற்ற கன்யா பூஜையில் அம்மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு, 20க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளின் பாதங்களை கழுவி பூஜை செய்தார். அதன் பின்னர் பேசிய அவர், பாரதத்தின் சனாதன தர்மத்தின் பாரம்பரியத்தின்படி பெண் சக்தியை வழிபடும் இந்த பூஜை, புதிய உத்வேகத்தை அளிக்கிறது என்று தெரிவித்தார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?