undefined

பிரபல நடிகையை வாழ்த்திய நயன்தாரா.. வைரலாகும் இன்ஸ்டா...!!

 

'சூரரைப் போற்று' திரைப்படத்தின்  மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் அபர்ணா பாலமுரளி கிருஷ்ணா.  இவர் முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்க்கப்பட்டதுடன்  சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றவர்.  'சூரரைப் போற்று' படத்தை தொடர்ந்து   வீட்ல விசேஷம், தீதும் நன்றும், நித்தம் ஒரு வானம் உட்பட தமிழ் மற்றும் மலையாளப் படங்களிலும் பிசியான நடிகையாக இருந்து வருகிறார்.

தமிழில் தற்போது   தனுஷின் 50வது படமான D50 திரைப்படத்தில் நடித்த் வருகிறார்.  இவர் பிண்ணனிப் பாடகியும் கூட.  'இம்பாம்' என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக பின்னணி பாடகியாக அறிமுகமாகியுள்ளார். சமூக வலைதளங்களில் எப்போது  ஆக்டிவாக இருக்கும் அபர்ணா பாலமுரளி அவ்வப்போது தனது புகைப்படங்களை  அப்டேட்செய்து வருகிறார்.  இந்நிலையில் நடிகை அபர்ணா பாலமுரளி   புதிய ஆடை தொழில் ஒன்றை தொடங்கியுள்ளார். அதன் மூலம் பெண்களுக்கான பிரத்யேகமான உடைகளை வடிவமைத்து வருகிறார். அதற்கு HYPSWAY என பெயரிட்டுள்ளார். அபர்ணாவின் இந்த புதிய முயற்சிக்கு லேடி சூப்பர் ஸ்டார் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை  தெரிவித்துள்ளார் .  

இது குறித்து  நடிகை நயன்தாரா தனது இன்ஸ்டாவில்  அபர்ணா பாலமுரளியின் பிசினஸ் விளம்பர வீடியோவை பதிவிட்டு  "உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்" என வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  நடிகை நயன்தாரா திரையுலகில் பிசியான நடிகையாக இருப்பதை போலவே பிஸினசிலும்  வெற்றிகரமாக இருந்து வருகிறார். சமீபத்தில்  லிப் பாம் கம்பெனியுடன்  'ஃபெமி 9' என்ற பெயரில் சானிட்டரி நாப்கின் கம்பெனி ஒன்றையும் நடத்தி வருகிறார்.   ரவுடி பிக்சர்ஸ் என்ற பெயரில் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.   

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!