இந்திய ராணுவத்தில் நீரஜ் சோப்ராவுக்கு கெளரவ பதவி!
இந்திய ராணுவத்தில் நீரஜ் சோப்ராவுக்கு கெளரவ பதவி வழங்கப்பட்டுள்ளது. பல துறைகளில் உயரிய விருதுகளை பெற்றவர்கள் இந்திய ராணுவத்தில் கெளரவிக்கப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தாதாசாகேப் விருது பெற்ற மலையுல உலகின் சூப்பர் ஸ்டாரும் பிராந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலுமான மோகன்லால், ராணுவத் தளபதியை சந்தித்து பாராட்டு பெற்றார்.
இந்த நிலையில், ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவி வழங்கப்பட்டது. இந்த விழா பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி முன்னிலையில் டெல்லியில் நடைபெற்றது.
தடகளத்தில் நீரஜ் சோப்ராவின் சாதனைகளையும், மில்லியன் கணக்கான இளம் இந்தியர்களை ஊக்குவிப்பதற்கான அவரது பங்களிப்பையும் கவுரவிக்கும் வகையில் இந்த அங்கீகாரம் வழங்கப்படுகிறது. நாட்டிற்கு பெருமை சேர்த்ததற்காக ஆயுதப் படைகளில் கவுரவப் பதவிகளைப் பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட விளையாட்டு வீரர்களின் குழுவில் அவர் இணைந்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!