பிறந்த சில நிமிடங்களிலேயே உட்கார்ந்த குழந்தை?  வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?

 

மருத்துவமனையில் பிறந்த சில நிமிடங்களிலேயே பச்சிளம் குழந்தை ஒன்று தானாகவே எழுந்து உட்கார்ந்திருப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகப் பிறந்த குழந்தைகள் தங்களது கழுத்தை நிலைநிறுத்தவே பல வாரங்கள் ஆகும் நிலையில், இந்த வீடியோவில் உள்ள குழந்தை ஒரு கையை ஊன்றியபடி அமர்ந்து கொண்டு, சுற்றும் முற்றும் வேடிக்கை பார்ப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்த விசித்திரமான காட்சியைக் கண்டு வியப்படைந்த நெட்டிசன்கள், "குழந்தை பிறந்ததுமே வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நிமிர்ந்து உட்கார்ந்துவிட்டது" எனப் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இதனால் இந்த வீடியோ காட்டுத்தீயாகப் பரவி, பலரிடமும் விவாதத்தைத் தூண்டியுள்ளது.

இருப்பினும், மருத்துவ ரீதியாகப் பார்க்கும்போது பச்சிளம் குழந்தைகளுக்குத் தண்டுவடம் மற்றும் கழுத்துத் தசைகள் அவ்வளவு வலிமையாக இருக்காது என்பதால், இது சாத்தியமற்றது என மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. எனவே, இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் அல்லது நவீன எடிட்டிங் மென்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியான வீடியோவாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. உண்மைத்தன்மை குறித்த தெளிவான விவரங்கள் இல்லாத நிலையிலும், இந்த வீடியோ தொடர்ந்து இணையவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை