தமிழக அரசு கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு புதிய நேரடி நியமனம்!
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களுக்கு நேரடி நியமன அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இன்று (அக்.17) முதல் நவம்பர் 10-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் செய்யலாம்.
மேலும், கடந்த அக்டோபர் 6-ந்தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீண்டும் விண்ணப்பிக்கும் ஆசிரியர்களுக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துதல், வயது வரம்பில் தளர்வு போன்ற சலுகைகள் வழங்கப்படுகின்றன. பாட வாரியாக காலி பணியிட விவரம் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளம் www.trb.tn.gov.in-ல் பார்க்கமுடியும்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!