பொதுக்கூட்டம், ரோடு ஷோவுக்கான புதிய விதிமுறைகள்... அனைத்து கட்சி கூட்டம் தொடக்கம்!
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றி கழகத்தின் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது மாநிலம் முழுவதும் அதிர்வலை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தையடுத்து, அரசியல் தலைவர்களின் பொதுக்கூட்டம் மற்றும் ரோடு ஷோவுக்கான அனுமதிகள் குறித்து வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனைக்குப் பிறகு, அரசாங்கம் 20 அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து அனைத்துக் கட்சி கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மா.சுப்பிரமணியன் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இதில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி. என்.ஆர்.இளங்கோ, காங்கிரஸ் சார்பில் செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார், அதிமுக சார்பில் ஜெயக்குமார், இன்பதுரை, மேலும் வி.சி.க., தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட், மக்கள் நீதி மய்யம், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் வழங்கும் கருத்துக்களின் அடிப்படையில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் தயாரிக்கப்பட்டு, அவை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!