இன்னும் 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை !
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இறுதி முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை தமிழகத்திற்கு முக்கியமான மழைக்காலமாகும். குறிப்பாக சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, கடலூர் போன்ற வட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.இந்த ஆண்டும் அதேபோல் நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை தீவிரமாக இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்குப் பருவமழை அக்டோபர் 16 முதல் 18 வரை இந்தியாவின் பல பகுதிகளில் முழுமையாக விலகும் எனவும், அதன் பின்னர் வடகிழக்குப் பருவமழை தொடங்கும் சாத்தியம் அதிகம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் அடிப்படையில், தமிழகத்தில் வரும் நாட்களில் பரவலாக மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!