undefined

 அடுத்த 24 மணி நேரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்க வாய்ப்பு

 
 

வடகிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் பின்னணியில், தென்மேற்கு பருவமழை இந்தியாவின் பல பகுதிகளில் விலகும் நிலையில் உள்ளது. அதேசமயம், தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், கேரளா, தெற்கு கர்நாடகம், ராயலசீமா மற்றும் தெற்கு ஆந்திரப் பிரதேசப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகை அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் உருவான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மேற்கு திசையில் நகர்ந்து, கடலோர தமிழகம் மற்றும் குமரிக்கடல் அருகே நிலவுகிறது. இதேபோல், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் தாக்கத்தால் வரும் 19ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவாகக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். அதேபோல் கடலூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?