7 வது நாளாக ஒகேனக்கல் ஆற்றில் பரிசில் இயக்கவும், குளிக்கத் தடை!
இந்தியாவின் பல பகுதிகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் மழை பெய்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.இதனையடுத்து நீர்நிலைகள் நிரம்பத்தொடங்கியுள்ளன. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 74,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
நேற்றைய நிலவரப்படி வினாடிக்கு 65,000 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போதைய நிலவரப்படி வினாடிக்கு 74,000 கன அடியாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நீர்வரத்து காரணமாக சுற்றுலா பணிகளின் பாதுகாப்பு கருதி, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவியில் குளிக்கவும், பரிசில் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அந்த வகையில் 7வது நாளாக இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. மிகக் குறிப்பாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு, மாண்டியா, வயநாடு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கே.எஸ்.ஆர் எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. இந்நிலையில் இன்று காலை தமிழக - கர்நாடக எல்லையான பிலிகுண்டுவிற்கு 61000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் சினிபால்ஸ் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
காவிரி ஆற்றின் இரு கரைகளையும் தொட்டு வெள்ளம் சீறிப்பாய்கிறது. அதுமட்டுமின்றி ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் பாதை முற்றிலுமாக மூழ்கிவிட்டது. இதன் காரணமாக ஒகேனக்கலில் அருவிகளில் குளிக்கவும், பரிசில்களில் சவாரிகள் செய்யவும் தொடர்ந்து 5 வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 15 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீட்டிக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை அடுத்து சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா