undefined

ஜன.1 புத்தாண்டு திருப்பதி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கியது... முழு விபரம்!

 

திருப்பதி ஏழுமலையானை புதுவருடம் 2026 ஜனவரியில் வழிபட ஆன்லைனில் தரிசன டோக்கன் முன்பதிவு இன்று தொடங்கியது.  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2026ம் ஆண்டு ஜனவரி மாதம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தேவஸ்தானம் சார்பில் பல்வேறு வகையான தரிசன டிக்கெட்டுகள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. 

ஜனவரி (2026) மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் அங்கப்பிரதட்சண டோக்கன்கள் ஒதுக்கீடு இன்று காலை 10 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதே போன்று ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு வரும் அக்டோப ர் 24ம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளிகள், நீண்ட நாட்களாக நோயால் அவதிப்படும் பக்தர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான (ரூ.300 கட்டண டிக்கெட்) ஒதுக்கீடு 25-ந்தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?