இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் 18000 இந்தியர்களை மீட்க “ஆபரேஷன் அஜய்” தொடக்கம்...!!
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தொடங்கியுள்ள நிலையில் அங்கு சிக்கி தவிக்கும் இந்தியர்களை தாயகம் திரும்பச்செய்ய ஆபரேஷன் அஜய் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. காசாவில் ஹமாஸ் குழுவுடனான போருக்கு மத்தியில் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் நாடுதிரும்பும் வகையில் ஆபரேஷன் அஜய் மீட்புப் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. அதன்படி இஸ்ரேலில் தவிக்கும் 18,000 இந்தியர்களை பத்திரமாக அழைத்துவரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பதிவு செய்திருக்கும் மற்ற நபர்களும் அடுத்தடுத்த விமானங்களில் அழைத்துவரப்படுவர் என இந்தியத் தூதரகம் அறிவித்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே நடைபெறும் போரில் கடந்த 5 நாட்களில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர். பெண்கள், குழந்தைகள் சித்ரவதை செய்யப்படுகின்றனர். அதே நேரத்தில் பாலஸ்தீனியப் பகுதிகளைச் சுற்றி இஸ்ரேல் தனது இராணுவப் படைகளைக் குவித்து முற்றுகையிட்டுள்ளது. அதே போல் ஹமாஸ் அமைப்பினர் சுமார் 150 அதிகாரிகளை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளது . அதில் குறைந்தது 14 தாய்லாந்து, 2 மெக்சிகன் , அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மானியர்களும் அடங்குவர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாத மகிமைகள் , வழிபாடு, பலன்கள்!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
புரட்டாசி மாசம் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது?! அறிவியல் காரணம்...