ஆபரேஷன் சிந்தூரில்  பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம்... இந்திய விமானப்படை தளபதி! 

 


 
 
இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை  முன்னிட்டு விமானப்படை தளபதி ஏ.பி.சிங் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் ”ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஆயுதப்படைகளுக்கு தெளிவான அறிவுரை கொடுக்கப்பட்டது. இந்தியா தன்னுடைய இலக்கை எட்டியதால் பல்வேறு நலனை கருத்தில் கொண்டு அவர்களே போர் நிறுத்தம் கோரவேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளியது என சுட்டிக்காட்டினார்.


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில்  கலத்தில் இருந்த F16 போர் விமானங்கள் 5, வானத்தில் இருந்த அதி உயர் தொழில்நுட்பம் கொண்ட போர் விமானங்கள் 5 என ஒட்டு மொத்தமாக 10 விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், பல விமானங்கள், விமான படைத்தளங்கள் அழிக்கப்பட்டதாகவும்  தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் தாக்குதலை முறியடித்ததில் இந்தியாவினுடைய F 4 ரக அமைப்புக்கு மிக பெரிய பங்கு உள்ளது. பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலையை ஏற்படுத்தியதாகவும், எதிரி படைக்குள் இந்திய படைகள் சுமார் 300 கிலோ மீட்டர் வரை தாக்குதல் நடத்தியதாக குறிப்பிட்டார். பாகிஸ்தான் இந்தியாவை சேர்ந்த 15 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக தொடர்ந்து கூறி வருகிறது.


அவர்கள் நினைத்தாள் நினைத்துகொள்ளட்டும். அதனைப் பற்றி தங்களுக்கு எந்த விதமான கவலையும் இல்லை குறைந்தபட்சம் தங்கள் நாட்டு மக்களை திருப்திபடுத்த அவர்களும் ஏதேனும் ஒன்றைக் கூற வேண்டும் அல்லவா எனக் குறிப்பிட்டார். பாகிஸ்தான் ஏதாவது இந்திய விமானங்களை சுட்டு வீழ்த்தி இருந்தால் அதற்கான ஒரு ஆதாரத்தையாவது இதுவரை அவர்கள் காண்பித்திருக்கிறார்களா எனவும் விமானப்படை தளபதி கேள்வி எழுப்பினார்.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?