undefined

 தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு... தலைமை செயலாளர் திடீர் உத்தரவு!

 

 தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் அதிகரித்து வரும்  பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதைப்பொருள் நடமாட்டம் இவைகளை  கட்டுப்படுத்துவது குறித்து  நேற்று தலைமைச் செயலாளர் முருகானந்தம்   மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில்  பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

அதன்படி  பள்ளிகளில் பாலியல் துன்புறுத்தல்கள் ஏற்படாதவாறு உள் புகார் குழுவை அமைக்க வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  
அதன் பிறகு பாலியல் பிரச்சனைகள் குறித்து  உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப் புழக்கங்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் . உடனடியாக அவைகளை களைய  தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மேலும் மாணவ மாணவிகள் போதை பழக்கங்களுக்கு அடிமையாக இருப்பது தெரிய வந்தால் அவர்களுக்கு முறைப்படி மருத்துவ ஆலோசனையும், உரிய சிகிச்சையும் வழங்க வேண்டும் எனவும் தலைமை செயலாளர் அறிவுறுத்தியுள்ளார். அத்துடன் பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் போதைப் பழக்கங்கள் குறித்து பள்ளிகளில் மாணவ மாணவிகள் மத்தியில் உரிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை