பாகிஸ்தான் எங்களுடைய நட்பு நாடு கிடையாது... தாலிபான் வெளியுறவுத் துறை அமைச்சர் பரபரப்பு!
ஆப்கானிஸ்தான் தலீபான் அரசின் வெளியுறவு மந்திரி அமீர் கான் முத்தகி, “பாகிஸ்தானைத் தவிர எங்களின் அனைத்து அண்டை நாடுகளுடனும் நல்ல உறவு நிலவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு 6 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக வந்த முத்தகி, மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பல்வேறு இருதரப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தார். இதையடுத்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு எங்கள் நாட்டில் எந்தவித இடமும் இல்லை” என்று கூறினார்.
மேலும், “பாகிஸ்தான் மட்டுமே எங்களின் நட்பு நாடு அல்ல. மற்ற ஐந்து அண்டை நாடுகளுடனும் எங்களுக்கு மகிழ்ச்சியான உறவு உள்ளது. பாகிஸ்தான் அமைதியை விரும்பவில்லை என்றால், எங்களுக்கு பிற வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தியாவுடனான எங்களின் வர்த்தக மதிப்பு தற்போது 100 கோடி அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 8,865 கோடி) ஆக உயர்ந்துள்ளது” என அவர் தெரிவித்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!