நெகிழ்ச்சி வீடியோ... பும்ராவுக்கு பாகிஸ்தான் வீரர் பரிசு!!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா. இவர் 2021ல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளரான சஞ்சனா கணேசனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு செப்டம்பர் 4ம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த சமயத்தில் சில நாட்கள் போட்டியிலிருந்து விலகி இருந்தார் நேற்று நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா களமிறங்கினார். இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 24.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. அப்போது, திடீரென கனமழை பெய்தது. மாலை 4.55 மணிக்கு தொடங்கிய மழை, இரவு 8 மணிக்கு பிறகும் தொடர்ந்ததால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
இன்று மீண்டும் விளையாட்டை தொடங்கிய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் இருவரும் சதமடித்தனர். இதன் மூலம் கே.எல்.ராகுல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்தது. விராட் கோலி 122 ரன்களும் கே.எல்.ராகுல் 111 ரன்களும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர். இதையடுத்து 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்ய உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!