காதலுக்கு சம்மதிக்காத பெற்றோர்... இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை!
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கொம்பன் கிராமத்தில், தன்னுடைய காதலுக்கு பெற்றோர் சம்மதிக்காமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இளம்பெண் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது கிராமத்தினரிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இது குறித்து போலீசார் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் கொம்பன் குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆத்திபாண்டி மகள் நர்மதா தேவி (23). இவர் தென்காசியைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் செல்போனில் அடிக்கடி பேசி தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் தெரிய வந்த நிலையில், குடும்பத்தினர் நர்மதா தேவியைக் கண்டித்து, அவரது காதலுக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் மன அழுத்தத்தில் இருந்து வந்த நர்மதா தேவி, கடந்த மாதம் 28ம் தேதி விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். உடனே பதறியடித்தப்படி நர்மதா தேவியை நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நர்மதா தேவி, சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இயேசுபாலன் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!