சோமாலிய கடற்கரையில் மால்டா கப்பல் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்!
சோமாலிய கடற்கரையில் கடற்கொள்ளையர் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில், இன்று மால்டா நாட்டின் கொடியுடன் பயணம் செய்த ஒரு வர்த்தகக் கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
தாக்குதலின் போது, கொள்ளையர்கள் இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டதுடன், ராக்கெட் எறிகுண்டுகளையும் பயன்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் கப்பலில் ஏறி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தச் சம்பவத்தையடுத்து, இங்கிலாந்து ராணுவத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் மையம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த பகுதியில் பயணிக்கும் அனைத்து கப்பல்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், தனியார் பாதுகாப்பு நிறுவனம் ஆம்ப்ரே தாக்குதல் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக உறுதிப்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!
பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!
பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!