பகீர் சிசிடிவி காட்சிகள்... உணவு டெலிவரி ஊழியரை கடித்து குதறிய பிட்புல் நாய்கள்!
இந்தியா முழுவதும் சமீபகாலமாக நாய்க்கடியால் ஏற்படும் விபரீதங்கள் அதிகரித்து வருகின்றன. அதனால் வீட்டை விட்டு வெளியில் வந்தாலே கவனமாகவும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டி உள்ளது. அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் வீட்டில் உணவு டெலிவரி செய்ய சென்றவரை தடை செய்யப்பட்ட பிட்புல் வகை நாய்கள் கடித்து குதறிவிட்டன. இதனையடுத்து அவர் உதவி கேட்டு அலறியவாறு கார்கள் மீது ஏறி நிற்கும் காணொலி காண்பவர்கள் கண்களில் நீரை வரவழைக்கிறது. ராய்பூரில் மருத்துவர் ஒருவரின் வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய சல்மான்கான் வந்திருந்தார்.
இதை அடுத்து நாய்கள் வீட்டிற்குள் சென்றதும் ரத்தம் வழிய வலியில் துடித்து கொண்டிருந்த சல்மான்கானுக்கு அக்கம்பக்கத்தினர் சிலர் தண்ணீர் கொடுத்து இளைப்பாற்றிவிட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் வைரலாக பரவி வருகிறது. மத்திய அரசு ஏற்கனவே பிட்புல் உட்பட 23 வகையான நாய் இனங்களை வீட்டில் வளர்க்க தடை விதித்துள்ளது. நாய்கள் கடித்தபோது உதவிக்கு அழைத்தும் உதவாத மருத்துவருக்கு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட வீட்டின் நாய்கள் இதுவரை 5 பேரை கடித்துள்ளதாகவும் உரிமையாளர் எதுவும் கண்டுகொள்ளாமல் சுதந்தரமாக சுற்றுவதால் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாகவும் அக்கம்பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா