undefined

ப்ளீஸ்... சாலையில் பூசணிக்காய் உடைக்காதீங்க... சென்னை மாநகர காவல்துறை ! 
 

 

இன்று அக்டோபர் 1ம் தேதி புதன்கிழமை ஆயுதபூஜை அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜைநாளில் தொழில் நிறுவனங்களில் எந்திரங்களுக்கு பூஜை செய்து வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் பூஜை செய்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆயுதபூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் சாலை பாதுகாப்புக்காக, சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம் என சென்னை மாநகர காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 

இது குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் ஆயுத பூஜையில் திருஷ்டி கழிக்க பூசணிக்காய்களை உடைக்கும் பழக்கம் உள்ளது. சாலையில் உடைப்பது வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தானது. சாலை பாதுகாப்புக்காக, சாலையில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். சாலை பாதுகாப்பை உறுதி செய்வோம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?