அதிரடி... பொங்கல் பரிசுத் தொகை ரூ2000?!  டபுள் ஜாக்பாட்டு தயாராகுங்க....  !!

 

தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக பெருமழை பெய்தது. இதில் தலைநகர் சென்னை மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வெள்ள நிவாரண நிதியாக சென்னையில் அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் ரூ6000  வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகைக்கு 2022ல் ரூ1000 வழங்கப்பட்டது. நடப்பாண்டை பொறுத்தவரை ரூ1500  முதல் ரூ2000 வரை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.


 தமிழகத்தை பொறுத்தவரை ஒவ்வொரு ஆண்டும்  தமிழர் பண்டிகையாம் பொங்கல் பண்டிகையை மிகச் சிறப்பாக மக்கள்  கொண்டாடும் வகையில் பொங்கல் பொருட்களுடன் ரொக்கப் பணம் வழங்கப்பட்டு வருகிறது.  பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்  இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், மிக்ஜாம் புயல் பாதிப்பு  காரணமாக   சென்னை உள்பட 4 மாவட்ட  மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.  இதற்கான டோக்கன் டிசம்பர் 16 முதல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது. இந்த மாத முடிவுக்குள் இந்த நிவாரணத் தொகை வழங்கப்பட்டு விடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது 


ரேஷன் கடைகள் மூலம் இந்த பணத்தை கொடுத்து முடித்ததும், ஜனவரி பொங்கல் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.  பொங்கல் பரிசு தொகை காண பொருட்கள் இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை. இதனையடுத்து   ரொக்கப் பணம் வழங்கவே அதிக வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.  இந்நிலையில்  தமிழகம் முழுவதும் உள்ள 2.19 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு ரூ 1500 முதல் ரூ2000 வரை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பொங்கலுக்கு 1 வாரத்துக்கு முன்பே இவற்றை வழங்கவும் திட்டமிடப்பட்டு வருகிறது.  

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!