பிரபல சின்னத்திரை நடிகை மீது கொடூர தாக்குதல்... வைரலாகும் வீடியோ!
பிரபல சின்னத்திரை நடிகை வைஷ்ணவி, தனது குடும்பத்தினரால் மிக கொடூரமாக தாக்கப்பட்டு காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ள வீடியோ ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2008-ல் ஸ்டார் ப்ளஸ் சேனலில் ஒளிபரப்பான ‘கசௌதி ஜிந்தகி கே’ தொடர் மூலம் இந்தியில் அறிமுகமானவர் நடிகை வைஷ்ணவி தன்ராஜ். அதை தொடர்ந்து சோனி சேனலில் ஒளிபரப்பான ‘சிஐடி’ தொடரில் இன்ஸ்பெக்டர் தாஷா குமார் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதுமட்டுமின்றி ஏராளமான தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.
அந்த வீடியோவில், “எனக்கு இப்போது உதவி தேவைப்படுகிறது. நான் இப்போது மும்பை காஷ்மீரா காவல் நிலையத்தில் இருக்கிறேன். நான் எனது குடும்பத்தினரால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளேன். எனக்கு ஊடகத்தினர், செய்தி நிறுவனங்கள் ஆகியோரின் உதவி தேவை” என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவை வைஷ்ணவி தனது நண்பரான ஹிமான்ஷு ஷுக்லா என்பவருக்கு அனுப்பியுள்ளார். அதை அவர் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், இந்த வீடியோ தற்போது வைரலாகி உள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் நிதின் ஷெராவத்தை திருமணம் செய்து கொண்ட வைஷ்ணவி தன்ராஜ், குடும்ப பிரச்சினை காரணமாக அவரை விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்
தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்
கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!
சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!