பிரபல தமிழ்பட ஒளிப்பதிவாளர் பாபு காலமானார்... திரையுலகினர் இரங்கல்!
தமிழ் திரையுலகில் பெயர் பெற்ற ஒளிப்பதிவாளர் பாபு காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளாக பாபு ஒளிப்பதிவாளர் பணியில் இருந்தவர். அவர் ஒளிப்பதிவு செய்த படங்கள் பல ரசிகர்களால் நேசிக்கப்பட்டவை.
தமிழ் சினிமாவில் கோலோச்சிய அத்தனை பிரபலங்களுடனும் பணிபுரிந்திருக்கிறார். ராஜா தேசிங்கு, கனிமுத்துப்பாப்பா, குறத்தி மகன், தில்லானா மோகனாம்பாள், புவனா ஒரு கேள்விக்குறி,பிரியா, அடுத்த வாரிசு, போக்கிரி ராஜா, தூங்காதே தம்பி தூங்காதே, தாலி காத்த காளியம்மன் என கிட்டத்தட்ட 150 படங்களுக்கு மேள் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்திருக்கிறார்.
எம் ஜி ஆர், சிவாஜி, ஜெயலலிதா, ஜெமினி, ஜெய்சங்கர், முத்துராமன், ரஜினி, கமல் என்று அனைத்து பிரபல நடிகர், நடிகைகளையும் படம் பிடித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மிகவும் நெருக்கமான ஒளிப்பதிவாளர்.
”என் கண்ணானவர்” என்று இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் இவர் குறித்து எப்போதும் பெருமையாக கூறுமளவுக்குச் சிறப்பைப் பெற்றவர் பாபு.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், இவர் தந்தை வின்செண்ட் வெங்கட்ராமனும் நெருங்கிய நண்பர்கள்.“தில்லானா மோகனாம்பாள்” படத்தில் மனோரமா நாதஸ்வரம் வாசிக்கும் காட்சியை பிரசாத் இல்லாததால் இவரே படமெடுத்தார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!