பிரபல தமிழ்பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்... திரையுலகினர் இரங்கல்!

 

பிரபல தமிழ்பட இயக்குநர் நாராயணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59. மனைவி அம்சவேணி மற்றும் ஒரு மகன் லோகேஸ்வரன், லோகேஸ்வரன் லண்டனில் பணிபுரிந்து வரும் நிலையில், மகன் சென்னை திரும்பியதும் இறுதிசடங்குகள் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

நடிகர்  ரோபா சங்கர் உயிரிழந்து ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், தமிழ் திரையுலகில் அடுத்த அதிர்ச்சியாக இயக்குநர் நாராயணமூர்த்தி மாரடைப்பால்  காலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'மனதை திருடி விட்டாய்', 'ஒரு பொண்ணு ஒரு பையன்' ஆகிய படங்களை இயக்கிய நாராயணமூர்த்தி நெஞ்சு வலி காரணமாக நேற்றிரவு 8.30 மணி அளவில் காலமானார். 

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் கடந்த ஒரு வார காலமாக உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நாராயணமூர்த்தி, சிகிச்சைப் பலனளிக்காமல் நேற்றிரவு காலமானார். அவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், தற்போது மகன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.

இயக்குநர் ஆர். டி. நாராயணமூர்த்தி எழுதி இயக்கி, 2001ம் ஆண்டு மனதை திருடிவிட்டாய் படம் வெளியானது. பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன் மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் பின்னர் ஒரு பொண்ணு ஒரு பையன் படத்தை இயக்கினர். பின் சீரியல்களை இயக்கி வந்தார். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?