undefined

பிரபல யூ-ட்யூப்பர் இன்பா அதிரடி கைது!

 

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல யூடியூப்பர்  இன்பா என்ற இன்பநிதி, ஆபாசமாக பேசி தனது யூ-ட்யூப் தளத்தில் வீடியோ வெளியிட்டு வந்த நிலையில், இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் இன்பா என்ற இன்பநிதி( 24). இவர் இன்பா டிராக் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். இதே பெயரில் இன்ஸ்டாகிராம் வலைத்தளத்திலும் தனது வீடியோக்களைப் பதிவேற்றி வந்தார். இவர் பதிவிடும் வீடியோக்களில் ஆபாச வார்த்தைகள் அதிகம் இருந்தது. அதிலும் சமீபத்தில் வெளியிட்ட வீடியோக்களில் மாணவி ஆசிரியரை காதலிப்பது போன்ற வீடியோக்களும், ஆபாச வார்த்தைகள் அதிகம் உள்ள வீடியோக்களும் இடம் பெற்றுள்ளது. 

இவரது வீடியோக்கள் அனைத்தும் அருவருக்கத்தக்க வகையிலும், ஆபாசமான வகையிலும், பெண்களின் நாகரிகத்தை இழிவுபடுத்தும் வகையிலும், இளைஞர் சமுதாயத்திற்கு சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாகவும்,  இவரது வீடியோக்களை பார்க்கும் மாணவிகள், பெண்கள் ஆகியோர் பாலியல் குற்றச் செயல்களில் ஈடுபட வாய்ப்புள்ளது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இதுகுறித்து  திருச்சி சைபர் க்ரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் திருச்சி மாவட்ட காவல்துறையில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் திருச்சி போலீசார் இன்பா என்ற இன்பநிதியை  கைது செய்துள்ளனர். 

ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாதம் சிறப்புக்கள்

கார்த்திகை பொறந்துடுச்சு... ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலை சிறப்புக்கள்!

சபரிமலைக்குச் செல்பவர்கள் தினமும் சொல்ல வேண்டிய ஐயப்பன் ஸ்லோகம்!