ரஷ்யாவில் ஒரே நாளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்... மக்கள் பீதி!
ரஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சாட்கா தீபகற்பத்தில் ஒரே நாளில் இருமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, நேற்று மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளது. இது பூமியின் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிகழ்ந்ததாகவும், 52.41 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 159.93 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை பகுதியில் மையம் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் அதிர்வுக்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, மதியம் 2.14 மணியளவில் அதே பகுதியில் மீண்டும் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து இரண்டு அதிர்வுகள் பதிவாகியதால் அப்பகுதி மக்கள் பெரும் பீதியடைந்தனர்.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சில குலுங்கியதோடு, மக்கள் அலறியடித்தபடி வீடுகள் மற்றும் அலுவலகங்களிலிருந்து வெளியில் ஓடினர். தற்போது பாதிப்பு, சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கம்சாட்கா தீபகற்பம் நில அதிர்வுகள் அடிக்கடி நிகழும் பிரதேசமாக இருப்பதால், உள்ளூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை நிலையில் உள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!