undefined

 கோவில் வளாகத்தில் பூசாரி வெட்டிக் கொலை! 

 
 

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பெருமாள்புரத்தைச் சேர்ந்த முருகேசன் (54), சுடலைமாடசுவாமி கோயிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். அவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி மற்றும் ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். நேற்று மதியம் முருகேசன்வீட்டில் உணவு சாப்பிட்டு, கோயில் வளாகத்தில் உறங்கியிருந்தபோது மர்ம கும்பல் ஒருவர் கோயில் வளாகத்தில் சென்று அவரை சரமாரியாக வெட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திலேயே முருகேசன் உயிரிழந்தார்.

ஆறுமுகநேரி போலீசார் சம்பவ இடத்தை விசாரணை செய்து வருகின்றனர். போலீசார் தெரிவிப்பதாவது, முருகேசன் கடந்த 2023ம் ஆண்டு கோயிலில் கொடை விழா நடத்திய போது, பெருமாள்புரத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினருடன் முருகேசனுக்கு மோதல் ஏற்பட்டதாகும். அதன்பின் 2024ம் ஆண்டு கோயில் கொடை விழா போலீசாரின் பாதுகாப்பில் நடைபெற்று வந்தது.

இந்நிகழ்விற்கு முன் விரோதம் காரணமாக, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடைபெறவிருந்த கொடை விழா இரு தரப்பினரிடையே பிரச்னையால் ரத்து செய்யப்பட்டது. இதனால் போலீசார் இந்த முன் விரோதம் முருகேசன் கொலையுடன் தொடர்புடையதா அல்லது வேறு காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?