மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை நாடகமாடிய பூசாரி!
தலைநகர் டெல்லியில் மனைவியை மூச்சுத்திணறடித்து கொன்றுவிட்டு தற்கொலை என போலீசிடம் நாடகமாடிய கோவில் பூசாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி கேசவ்புரம் பகுதியைச் சேர்ந்த தினேஷ் சர்மா (42) அங்குள்ள கோவிலில் பூசாரியாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுஷ்மா சர்மா (40) மற்றும் 11 வயது மகளுடன் அவர் வசித்து வந்தார்.
குடும்பச் சண்டைகள் அடிக்கடி நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு சுஷ்மா மகளுடன் தூங்கிக் கொண்டிருந்த போது, கோபத்தின் உச்சத்தில் தினேஷ் சர்மா தலையணையால் மனைவியின் முகத்தை மூடி அழுத்தியதால் மூச்சுத் திணறி சுஷ்மா உயிரிழந்தார்.
பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்த தினேஷ், மனைவி தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடினார். ஆனால் விசாரணையின் போது அவரது வாக்குமூலத்தில் முரண்பாடு இருப்பதை போலீசார் கவனித்தனர். தொடர்ந்து கடுமையாகக் கேட்டபோது தினேஷ் சர்மா கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இந்நிலையில் சுஷ்மாவின் உறவினர்கள், தினேஷுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்தது என்றும், இதை சுஷ்மா முன்பே கூறியிருந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனால்தான் தகராறு ஏற்பட்டு கொலை நடந்ததாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
சம்பவம் குறித்து கேசவ்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தினேஷ் சர்மாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!