தலை வணங்கி வணக்கம் செலுத்திய பிரதமர்.. நீடூழி வாழ வாழ்த்து தெரிவித்த குஷ்பு மாமியார்..!
குஷ்பு மாமியாரை தலை வணங்கி வணக்கம் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று முன்தினம் சென்னை வந்த அவர், காலோ இந்தியா விளையாட்டு போட்டியை துவக்கி வைத்தார். அதன்பிறகு நேற்று திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்குச் சென்றார். 3வது நாளான இன்று, ராமர் பாலம் இருந்ததாக கூறப்படும் அரண்மனையை பிரதமர் மோடி பார்வையிட்டார். அதன்பின் தனுஷ்கோடி கோதண்டராமர் கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு பூஜைகள் செய்து தரிசனம் செய்கிறார்.
இதையடுத்து குஷ்பு, தனது மாமியார் தெய்வானையுடன் பிரதமர் மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பிரதமர் மோடி அவரை வரவேற்று தலை வணங்கி வணக்கம் செலுத்தினார். இதனால் மகிழ்ச்சி அடைந்த தெய்வானை, பிரதமர் மோடியை ஆசிர்வதித்து வாழ்த்து தெரிவித்தார். இந்நிலையில், தனது மாமியார் தெய்வானை சிதம்பரம் பிள்ளை பிரதமர் மோடியை சந்தித்தது குறித்து குஷ்பு தனது எக்ஸ் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டு கூறியதாவது:
எனது மாமியார் தெய்வானை சிதம்பரம் பிள்ளைக்கு 92 வயது. அவர் மோடியின் தீவிர பற்றாளர். இவ்வளவு மகிழ்ச்சியை கொடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி. இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. அவரை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும் என்ற ஆசை நிறைவேறியது. இதனால் அவர் உற்சாகமடைந்தார்.
உலகின் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் விரும்பப்படும் மற்றும் போற்றப்படும் தலைவரான பிரதமர் மோடி அவரை மரியாதையுடன் வரவேற்றார். அன்புடனும் பாசத்துடனும் பேசப்பட்ட அவருடைய வார்த்தைகள் மகனின் வார்த்தைகள் போல இருந்தது. இதனாலேயே அவர் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவராலும் போற்றப்படுகிறார். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. உண்மையில் அவர் ஆசீர்வதிக்கப்பட்டவர் என தெரிவித்திருந்தார்.
தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?
தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!
அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !
தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!