undefined

3 நாள் பயணம் நிறைவு.. தமிழகத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி..!

 

3 நாள் பயணமாக தமிழகம் வந்த பிரதமர் மோடி நேற்று முந்தைய நாள் காலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்துவிட்டு  இரவு கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் தங்கினார். நேற்று காலை ராணுவ விமானம் மூலம் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட 25 பேர் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டரில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அருகே அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடுக்கு சென்றார். அதனையடுத்து கோவிலில் தரிசனம் முடித்து விட்டு அதே ஹெலிகாப்டரில் ராமேஸ்வரம் சென்றார். பின்னர் ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி கோவிலுக்கு சாலை மார்க்கமாக காரில் சென்றார்.

அங்கு அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. வழி நெடுகிலும்,பொது மக்களும், பாஜக தொண்டர்களும் மலர் தூவி உற்சாக வரவேற்பளித்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரவாரமாக வரவேற்று மகிழ்ந்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னர் ராமநாதசுவாமி  கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி அக்னி தீர்த்தக்கடலில் நீராடி விட்டு 22 தீர்த்தங்களிலும் நீராடி ராமநாதசுவாமியை தரிசனம் செய்தார். அரிச்சல் முனை கடற்கரைக்கு சென்று ராமர் பாதம் வைத்ததாக கூறும் இடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி மதுரை வந்தார். அங்கிருந்து விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டு சென்றார். 3 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி புறப்பட்டார். அயோத்தி கோவில் திறப்பு விழாவுக்காக பிரதமர் மோடி ராமேஸ்வரத்தில் இருந்து புனித தீர்த்தம் மற்றும் புனித மண்ணை எடுத்துச் செல்கிறார்.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!