undefined

22000போலீசார்... சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு... நாளை பிரதமர் தமிழகம் வருகை... !

 

பிரதமர் மோடி நாளை தமிழகம் வர இருக்கும் நிலையில் நாளை முதல் 3 நாட்கள்   தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்கிறார். இந்நிலையில்  பிரதமரின் பாதுகாப்பினை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம்  நடத்தப்பட்டது. இந்த கூட்டம்  தலைமை செயலகத்தில் தமிழக அரசின் பொதுத்துறை செயலர் நந்தகுமார் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.


இக்கூட்டத்தில் தமிழக பாதுகாப்பு குழு உட்பட மத்திய அரசின் பாதுகாப்பு அதிகாரிகளும், சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி  உட்பட  பல காவல்துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர். இது குறித்த செய்திக்குறிப்பு ஒன்றை காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் பிரதமர் வருகையொட்டி சென்னையில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சுமார் 22000 போலீசார்   பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.  


சென்னையை தொடர்ந்து திருச்சி, மதுரை, இராமநாதபுரம்  மாவட்டங்களிலும் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதன்படி    திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் இதனையடுத்து  ராமேஸ்வரம் கோவிலில் சாமி வழிபாடு இதன் பிறகு மதுரை அங்கிருக்கு டெல்லி திரும்ப உள்ளார்.   மேலும் 3 நாட்களுக்கு  ட்ரோன்கள் ஆளில்லா விமானங்கள் பறக்கவும் தடையும் கட்டுப்பாடுகளும்   விதிக்கப்பட்டுள்ளன.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

அடக்கொடுமையே.. 112 வயசுல 8 வது கல்யாணம்..... மணமகனை வலைவீசி தேடும் பாட்டி... !

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க!