போலீஸ்காரரை குத்திக் கொன்று விட்டு தப்பியோடிய விசாரணைக் கைதி.. தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.50,000 சன்மானம் அறிவிப்பு!
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் காவல் நிலையம் அருகே, விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட கைதி ஒருவர் போலீஸ்காரரை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே போலீஸ்காரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
காவலர் பிரமோத்(42) தகராறில் ஈடுபட்ட ஷேக் ரியாஸ்(24) என்பவரை கைது செய்து விசாரணைக்காக தனது மோட்டார் சைக்கிளில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அப்போது ஷேக் ரியாஸ் திடீரென தப்பி ஓட முயன்ற போது, பிரமோத் அவரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது இருவருக்கும் இடையே கைக்கலப்பு ஏற்பட்டது. இதில் ஷேக் ரியாஸ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் பிரமோத்தின் மார்பில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே போலீஸ்காரர் பிரமோத் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து, ஷேக் ரியாஸ் போலீஸ்காரரின் மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டு சம்பவ இடத்திலிருந்து தப்பினார். இந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் பரவிய நிலையில் உடனடியாக போலீசார் பிரமோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தப்பியோடிய ஷேக் ரியாஸைத் தேடினர். குற்றவாளி குறித்த தகவல்களைத் தெரிவிப்பவர்களுக்கு ரூ.50,000 பரித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, குற்றவாளியைப் பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!