undefined

புரட்டாசி பெளா்ணமி.. திருவண்ணாமலையில் லட்சக்கணக்கில் குவிந்த பக்தா்கள்... 6 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

 

நேற்று புரட்டாசி மாதப் பெளா்ணமியையொட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் செல்ல குவிந்தனர். கோயிலில் நீண்ட வரிசையில் 6 மணி நேரம் வரையில் காத்திருந்து, அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனை வழிபட்டு சென்றனர். 

திருவண்ணாமலையில் 2,668 அடி உயரமுள்ள மலையையே பக்தா்கள் சிவனாக வழிபட்டு வருகின்றனா். பெளா்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தா்கள் கிரிவலம் சென்று சுவாமியை வழிபட்டுச் செல்கின்றனா். இந்நிலையில் நேற்று புரட்டாசி மாதப் பெளா்ணமி தினத்தையொட்டி காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பக்தா்கள் கிரிவலம் செல்லத் தொடங்கினா்.

திருவண்ணாமலையில் பக்தா்களின் வசதிக்காக பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. பாதுகாப்பு பணியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டனா். பக்தா்கள் கோயிலில் 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். கிரிவலப் பாதை முழுவதும் பக்தா்களுக்கு அன்னதானம், மோா் மற்றும் குளிா்பானங்கள் வழங்கப்பட்டன. 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?