வீடியோ... ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து!! 26 பேர் பலி!! பிரதமர் நிவாரணம் அறிவிப்பு!!
Aug 23, 2023, 16:17 IST
மிசோரம் மாநிலம் சாய்ராங் பகுதியில் ரயில்வே மேம்பாலம் இடிந்து விழுந்துள்ளது. இந்த கோர விபத்தில் 26 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.மிசோரம் தலைநகர் அய்ஸ்வாலில் இருந்து சுமார் 21 கி.மீ., தொலைவில் இருக்கும் சாய்ரங் பகுதியில் இன்று காலை 11 மணிக்கு இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்த இடத்தில் 40 தொழிலாளிகள் பாலத்தில் வேலை செய்து வந்தனர். "இடிபாடுகளில் இருந்து இதுவரை 26 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. பலர் காணாமல் போயிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!