வைரல் வீடியோ... போலீசையே ஓட விட்ட போதை ஆசாமிகள்!!
பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கத்தில் திருமாவளவன் கோயில் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த பகுதியில் கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த இளைஞர்கள் திருமாவளவனை கத்தியை காட்டி பணம் கேட்டு மிரட்டினர்.அவர் பணம் தர மறுக்கவே கையில் இருந்த கத்தியால் அவரை அறுத்துவிட்டு அவரிடம் இருந்த பணத்தை பிடுங்கி சென்றனர். இதனால் படுகாயம் அடைந்த திருமாவளவன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார்.
இவர்கள் மூவரும் சேர்ந்து சுற்றுவட்டாரத்தில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர். போதை ஆசாமிகளை பிடிக்க சென்ற காவலரின் கையில் தடி மற்றும் துப்பாக்கி இருந்தும் இளைஞர்களை கண்டு பின்னோக்கி ஓடும் வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.சமீபகாலமாக அந்த பகுதிகளில் கஞ்சா போதையில் இளைஞர்கள் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவதாக அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆவணி மாத சிறப்புக்கள், பண்டிகைகள், வழிபாடுகள்!!