undefined

சமாதானத்துக்கு சம்மதிக்காத ரதிதேவி... கத்தியால் குத்திக் கொன்ற கணவன்!

 

எவ்வளவோ முறை பேசிப் பார்த்தும் மனைவி சமாதானத்திற்கு ஒத்து வராததால், கத்தியால் குத்திக் கொன்ற கணவனைப் போலீசார் கைது செய்து  மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் தாதகாப்பட்டி தாகூர் தெருவை சேர்ந்த 37 வயது கண்ணன், மனைவி ரதிதேவி (27) ஆகியோருக்கு 11 வயது மகள் சுபஸ்ரீ மற்றும் 7 வயது மகன் ஸ்ரீகரன் உள்ளனர். கண்ணன் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கணவன் மனைவி இடையே சந்தேகம் மற்றும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரதிதேவி பெற்றோர் வீட்டுக்கு சென்றார்.

அவ்வாறான நிலையில், கண்ணன் மனைவியுடன் சமாதானம் பெற முயன்றாலும், ரதிதேவி மறுப்பு தெரிவிப்பதால் கண்ணன் ஆத்திரம் அடைந்தார். மனச்சோர்வால் கண்ணன் கத்தியால் ரதிதேவியை சரமாரியாக குத்தியார். ரத்தத்தில் பரிதாபமாக மூழ்கிய ரதிதேவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே ரதிதேவி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி கண்ணனை கைது செய்தனர். நடத்தை சந்தேகத்தால் ஏற்பட்ட தகராறில் கணவன் மனைவியை குத்திக் கொலை செய்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?