undefined

 தனுஷீன் ‘ராயன்’ படம் ஓடிடியில் வெளியானது... ரசிகர்கள் கொண்டாட்டம்!

 
 இன்று காலை, நடிகர் தனுஷ் நடித்து, இயக்கிய ‘ராயன்’ திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.நடிகர் தனுஷ் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் 2வது ‘ராயன்’. நடிகராக அவருடைய 50வது படம் என்று பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸான ராயன் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக இந்தப் படம் ரூ. 100 கோடியைக் கடந்தது. 

தனுஷூடன் காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன் உள்ளிட்டப் பலர் இதில் நடித்திருக்கின்றனர்.ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வாட்டர் பாக்கெட், உசுரே நீதானே ஆகிய பாடல்கள் யூடியூப் தளத்தில் பல மில்லியன் பார்வைகளையும் இன்ஸ்டாவில் இளைஞர்கள் மத்தியிலும் டிரெண்டானது. ’ராயன்’ 

சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு இது பெரியளவில் லாபத்தைக் கொடுத்ததால், நடிகர், இயக்குநர் தனுஷை அழைத்து நடிப்புக்கும், இயக்கத்திற்கும் என தனித்தனியே ரெண்டு செக் கொடுத்து மகிழ்ச்சியைத் தெரிவித்தார் கலாநிதி மாறன். அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்தப் படம் இன்று வெளியாகியுள்ளது. திரையரங்குகளில் பார்க்கத் தவறியவர்களும் மீண்டும் படம் பார்க்க வேண்டும் என்று விரும்புவர்களும் ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பகீர்! கல்லூரி மாணவியைக் கடத்தி பாலியல் வன்கொடுமை!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ! குளிக்கச் சென்றவரை உயிரோடு முழுங்கிய முதலை