பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிங்க... இத்தாலியில் வெடித்த போராட்டம்!
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இருப்பினும், இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்க திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இதன் காரணமாக தலைநகர் ரோம் உட்பட பல முக்கிய நகரங்களில் வன்முறை போராட்டங்கள் வெடித்துள்ளன.
அங்கு நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால், போலீசார் கண்ணீர் புகை குண்டுகளையும், தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இந்த போராட்டங்கள் பள்ளிகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகளையும் பாதித்தன. இதனால் இத்தாலியின் பல பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!