undefined

  ‘மோன்தா’ புயல் ... தமிழகத்துக்கு ஆரஞ்ச் அலர்ட், ஆந்திரத்துக்கு ரெட் அலர்ட்!

 

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதே சமயம், வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தாய்லாந்து நாடு பரிந்துரைத்த பெயரின்படி, இந்த புயலுக்கு ‘மோன்தா’  எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் தென்கிழக்கு வங்கக்கடலில் ‘மோன்தா’ புயல் உருவானது. இது சென்னைக்கு கிழக்கே-தென்கிழக்கே சுமார் 600 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. நாளை காலைக்குள் இது தீவிர புயலாக வலுப்பெற்று, மாலை அல்லது இரவில் மச்சிலப்பட்டினம்–கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திர கடற்கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரையை கடக்கும் போது மணிக்கு 90 முதல் 100 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மோன்தா புயலின் தாக்கத்தால் இன்று காலை முதல் தமிழகம் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் மற்றும் ஆந்திரப் பிரதேசத்திற்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தமிழகத்தில் இன்று மற்றும் நாளை ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!