கனடாவில் தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியீடு
கனடா அஞ்சல் துறை, 2017ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின் போதும், சிறப்பு அஞ்சல் தலைகளை வெளியிட்டு வருகிறது. இந்த தொடரில், 2025ம் ஆண்டுக்கான புதிய தீபாவளி சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வெளியிடப்பட்ட தபால் தலை வடிவமைப்பை இந்திய வம்சாவளியை சேர்ந்த கலைஞர் ரித்து கனால் உருவாக்கியுள்ளார். சிறப்பு தலையில் பாரம்பரிய ரங்கோலி பட வடிவம் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் கனடாவில் வாழும் இந்தியர்களுக்கு தீபாவளி விழாவின் பாரம்பரிய மற்றும் கலாசார அம்சங்களை அனுபவிக்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தபால் தலை வடிவமைப்பில் “தீபாவளி” என்ற வார்த்தை இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வெளிநாடுகளில் இந்தியப் பாரம்பரியம், தீபாவளி திருவிழா விழிப்புணர்வு மற்றும் கலாச்சார அடையாளங்களை அறிமுகப்படுத்துவதோடு, கலை மற்றும் பாரம்பரியத்தின் இணைப்பை உலகம் பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு தபால் தலை வெளியீடு, கனடாவில் வாழும் இந்திய சமூகத்தினருக்கு மட்டுமல்லாது, தீபாவளி விழா, கலாச்சார மரபு மற்றும் கலைப்பண்புகளை உலகளாவிய அளவில் அறிமுகப்படுத்தும் வாய்ப்பாக அமைகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!