undefined

தமிழ்நாடு முழுவதும் தெருக்களில் சாதிப் பெயர்கள் நீக்கம்...  வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! 

 

தமிழகத்தில் தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், நீர் நிலைகள் உள்ளிட்ட பொதிடங்களில் இடம்பெற்றுள்ள சாதிப் பெயர்களை மாற்றும் பணிக்கு மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அக்டோபர் 8 அன்று வெளியான அரசாணை, சமூக ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கத்தோடு அமலுக்கு வருகிறது.

இந்த நடவடிக்கை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அளித்த அறிவிப்பின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர்களின் வழியே நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த நெறிமுறையின் படி, ஆதிதிராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற சாதிச் சார்ந்த பெயர்கள் நீக்கப்பட்டு, சாதியை பிரதிபலிக்காத பெயர்களாக மாற்றப்பட வேண்டியுள்ளது.

தற்போது, மாநகராட்சிகளில் 677 இடங்கள், நகராட்சிகளில் 455 இடங்கள் என மொத்தம் 1,132 இடங்களில் இத்தகைய பெயர்கள் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இந்த பெயர்கள் மாற்றப்படும் பகுதிகள் தெருக்கள், சாலைகள், குடியிருப்புகள், குளங்கள், ஏரிகள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கியவை.

புதிய பெயர்களுக்காக, தமிழ் மொழி, பண்பாடு, வரலாறு சார்ந்த தலைவர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. உதாரணமாக, திருவள்ளுவர், பாரதியார், அண்ணா, பெரியார், காமராஜர், கலைஞர் போன்றோர் பெயர்கள் தெருக்களுக்கு பயன்படுத்தலாம். நீர் நிலைகளுக்கு ரோஜா, முல்லை, மல்லி போன்ற பூக்கள் அல்லது மரங்கள், இயற்கை அமைப்புகள், வரலாற்று அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு பெயரிடலாம்.

பெயர் மாற்றத்துக்கான முடிவுகள் பொதுமக்கள் கருத்துடன் உருவாக்கப்பட வேண்டும். உள்ளூர் மன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின், மாவட்ட அரசிதழில் அறிவிக்க வேண்டும். இந்த பணிகள் நவம்பர் 19, 2025க்குள் நிறைவு செய்ய வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பெயர் மாற்ற செயல்முறைக்கு முக்கியமான தேதிகள் வருமாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளன: