undefined

திருச்செந்தூர் கோவிலில் புனரமைக்கப்பட்ட நாழிக்கிணறு, அன்னதான கூடம் திறப்பு!

 

திருச்செந்தூர் கோவிலில் ரூ. 16.14 கோடி மதிப்பிலான அன்னதானக் கூடம், புனரமைக்கப்பட்ட நாழிக்கிணறு மற்றும் சலவைக் கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில், ரூ. 11.25 கோடியில் தரைதளம், முதல் தளம் என 2 தளங்ளில் சுமார் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் உணவருந்தும் வகையிலான அன்னதானக் கூடம், ரூ. 3.05 கோடியில் பழமைமாறாமல் புனரமைக்கப்பட்ட நாழிக்கிணறு மற்றும் ரூ. 1.84 கோடியில் கட்டப்பட்டுள்ள சலவைக் கூடம் ஆகியவற்றை சென்னை தலைமை செயலகத்திலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.

இதையடுத்து, திருச்செந்தூரில் புதிய அன்னதானக் கூடத்தில் அன்னதானத்தை தக்கார் ரா.அருள்முருகன் தொடங்கி வைத்தார்

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?