குடும்பத்தாரின் அன்பை சோதிக்க இறந்தது போல நடித்த ஓய்வுபெற்ற விமானப் படை வீரர்!
பிகார் மாநிலம் கயா மாவட்டம் கொன்சி கிராமத்தைச் சேர்ந்த 74 வயதான மோகன் லால், விமானப் படையில் சேவை செய்த ஓய்வுபெற்றவர். இவரின் மனைவி 14 ஆண்டுகளுக்கு முன் காலமானார்; அவருக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
மோகன் லால், குடும்பத்தினரும் உறவினர்களும் தன் மீது வைத்த அன்பையும், இறுதிச் சடங்கில் யாரெல்லாம் பங்கேற்கிறார்கள் என்பதையும் பரிசோதனை செய்யும் நோக்கத்தில் இறந்துவிட்டார் போல நடித்து நாடகத்தை அரங்கேற்றினார். சில நாள்களுக்கு முன்பு, தனது இறுதிச் சடங்கில் ஆரத்தி எடுக்க வேண்டும் என நெருங்கியவர்களுக்கு கூறியிருந்தார்.
இறுதிச் சடங்கு நடந்த நாள், கிராம மக்கள் குவிந்திருந்த நிலையில், தகன மேடையில் ஆரத்தி எடுக்கப்பட்டு பாடல்கள் ஒலிபரப்பப்பட்டிருந்தபோது, மோகன் லால் எழுந்து வந்து அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். கிராமத்தினர் இந்த நிகழ்வை வியப்புடன் பார்த்தனர்.
இச்சம்பவத்தின் மூலம், மோகன் லால் குடும்பத்தினரின் அன்பை பரிசோதித்ததும், இறுதி மேடையில் யார் கலந்து கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!