undefined

வீட்டு மின் கட்டணம் 80% உயரும் அபாயம்... மத்திய அரசை விமர்சிக்கும் மின்துறை பொறியாளர்கள் ! 

 
 

 

மத்திய அரசு 6-வது முறையாக மின்சாரச் சட்ட திருத்தத்தை கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதனால், வீட்டு மின்கட்டணம் 80 சதவீதம் உயர வாய்ப்புள்ளதாகவும், அதேசமயம் ரயில்வே மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மின்சார விலை 20 சதவீதம் குறைக்கப்படுமெனவும், தமிழ்நாடு மின்துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் காந்தி தெரிவித்தார்.

சென்னை சேப்பாக்கம் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மின்சாரச் சட்ட திருத்தம் கொண்டு வரப்படும் ஒவ்வொரு முறையும் மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கின்றன. ஆனால் இப்போது கொண்டு வரப்படும் சட்டம், பல லட்சம் கோடி மதிப்புள்ள பொதுத்துறை மின் விநியோக நிறுவனங்களின் சொத்துகளை தனியாருக்கு விற்க வழிவகுக்கும். இதன் மூலம் மின்சாரம் சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் அபாயம் உள்ளது,” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “புதிய சட்டத்திருத்தத்தின் அடிப்படையில் ஒரே பகுதியில் பல தனியார் நிறுவனங்கள் செயல்படலாம். இதனால் அவர்கள் லாப நோக்கில் நகர்ப்புற நுகர்வோரை மட்டுமே தேர்வு செய்வார்கள். இதன் விளைவாக அரசு மின்வாரியங்கள் கிராமப்புறம் மற்றும் இலவச மின்சாரம் பெறுவோருக்கே சேவை செய்யும் நிலை உருவாகும். இதனால் நிதிச் சுமை அதிகரித்து வீட்டு மின் கட்டணம் உயர்வது தவிர்க்க முடியாது. எனவே மத்திய அரசு இந்தச் சட்ட திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும்,” எனக் காந்தி வலியுறுத்தினார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பள்ளத்தில் தவறி விழுந்த யானை !! வைரலாகும் வீடியோ!!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!