undefined

 தமிழகத்தையே உலுக்கிய ரிதன்யா வரதட்சணை வழக்கு... செல்போன்களை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

 
 

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கைகாட்டிபுதூரைச் சேர்ந்த அண்ணாதுரை மகள் ரிதன்யா (27) தற்கொலை செய்துகொண்ட வழக்கு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி 78 நாட்களில், வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்துகொண்ட ரிதன்யா வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வரமூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அதன்படி அவர்கள் காலை, மாலை போலீசில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, ரிதன்யாவின் தந்தை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரியிருந்தார். ஆனால் அதில் பலன் இல்லை என ஐகோர்ட்டு தெரிவித்தது.

இந்நிலையில், ரிதன்யாவின் கணவர் கவின்குமார், தாம் ஜாமினில் வீடு திரும்பியபோது ரிதன்யாவின் 2 செல்போன்களை கண்டுபிடித்ததாகவும், அவற்றை ஆய்வு செய்ய அனுமதி தர காவல்துறைக்கு உத்தரவிட கோரியுள்ளார்.

வழக்கு விசாரணை நடந்தபோது, ரிதன்யா திருமணத்தில் விருப்பம் இல்லை என பேசும் ஆடியோ பதிவுகள் அந்த செல்போன்களில் உள்ளதாக கவின்குமார் தரப்பு வாதிட்டது. இதற்கு போலீசார், போன்களை தடயவியல் ஆய்வுக்கு ஒப்படைத்தால் விசாரணை நடைபெறும் என தெரிவித்தனர்.இதனை பதிவு செய்த நீதிபதி சதீஷ்குமார், “ரிதன்யாவின் இரு செல்போன்களையும் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தி, விரைவில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டார்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?