திருப்பதி கோவிலில் ரூ.100 கோடி கொள்ளை... பகீர் சிசிடிவி காட்சிகள்!
திருப்பதி கோயில் உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதாக அந்த மாநில பாஜக தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி குற்றம் சாட்டினார். இது குறித்த சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி அந்த மாநிலத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலின் உண்டியல் பணம் ரூ.100 கோடிக்கு மேல் கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதாக பாஜக தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி குற்றம் சாட்டினார்.
இது குறித்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் வீடு, ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ரெட்டி, 2019 முதல் 2024 வரை நடந்த ஒய்எஸ்ஆர் ஆட்சியில் நடந்த "மிகப்பெரிய கொள்ளை" திருப்பதி கோயில் உண்டியல் பணம் ரூ.100 கோடி கொள்ளை எனக் கூறியுள்ளார். இது குறித்த வீடியோ காட்சிகளை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி பொதுச் செயலாளர் நாரா லோகேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாரா லோகேஷ் வெளியிட்டுள்ள சிசிடிவி காட்சியில் அந்த மாநிலத்தில் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இந்த வழக்கை உயர்நீதிமன்றம் தானாகவே முன்வந்து சிஐடியிடம் ஒப்படைத்திருப்பதாக தெரிவித்தார். ஆனால், ரவிக்குமாரின் உயிருக்கு போலீஸார் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளார். இந்த வழக்கு ஏற்கனவே லோக் அதாலத் மூலம் தீர்க்கப்பட்டதாகவும், பல ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் ரெட்டி குற்றம் சாட்டினார்.
திருப்பதி கோயிலின் செல்வத்தை கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் ஒரு முக்கிய போலீஸ் அதிகாரி பணிபுரிந்ததாகவும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் பகிர்ந்து கொண்டதாகவும், ஒரு பங்கு ஜெகன் மோகன் ரெட்டியின் தாதேபள்ளி அரண்மனைக்கு திருப்பி விடப்பட்டதாகவும், கொள்ளைக்குப் பிறகு முக்கிய ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!