பெண்ணை கர்ப்பமாக்கினால் ரூ.25 லட்சம் பரிசு... விளம்பரத்தைப் பார்த்து ரூ.11 லட்சம் இழந்த சபல ஆசாமி!

 

“நான் தாயாக விரும்புகிறேன், என்னை கர்ப்பமாக்கக்கூடிய ஒரு ஆணை தேடுகிறேன். வெற்றி பெற்றால் ரூ.25 லட்சம் பரிசு தருகிறேன்” எனும் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி புனேவிலுள்ள ஒப்பந்ததாரர் ஒருவர் மோசடியில் சிக்கி ரூ.11 லட்சம் இழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மராட்டிய மாநிலம் புனேயை சேர்ந்த 44 வயது ஒப்பந்ததாரர், சமூக வலைதளத்தில் இவ்விளம்பரத்தை பார்த்துள்ளார். அதில் “என்னை கர்ப்பமாக்கக்கூடிய ஆணுக்கு ரூ.25 லட்சம் பரிசு தரப்படும். சாதி, அழகு, கல்வி பொருட்டல்ல” எனக் கூறப்பட்டிருந்தது. இதனால் ஆர்வம் அடைந்த அந்த நபர், விளம்பரத்தில் கொடுக்கப்பட்ட எண்ணிற்கு தொடர்பு கொண்டார்.

அங்கு பேசுபவர்கள் “பரிசு பெறுவதற்கு சில சரிபார்ப்பு மற்றும் பதிவு செயல்முறைகள் உள்ளன” என்று கூறி, பதிவுக் கட்டணம், ஜி.எஸ்.டி., சான்றிதழ் கட்டணம் போன்ற பெயர்களில் பல்வேறு காரணங்களால் கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் 23ம் தேதி வரை மொத்தம் சுமார் 100 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.11 லட்சம் பெற்றனர்.

பின்னர் அந்த நபர் சந்தேகத்துடன் விளம்பரத்தில் குறிப்பிடப்பட்ட பெண்ணை தொடர்பு கொள்ள முயன்றபோது, மொபைல் எண் செயலிழந்திருந்தது. இதனால் தான் மோசடியில் சிக்கியதை உணர்ந்த அவர் உடனே புனே சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குகள் மற்றும் தொலைபேசி எண்களை முடக்கியுள்ளனர். இந்த மோசடியின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.

இதேபோன்ற போலி விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும், எந்த ஆன்லைன் பரிசு அல்லது உறவு சார்ந்த சலுகைகளையும் சரிபார்க்காமல் நம்பக் கூடாது எனவும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?