undefined

மனைவி  மாதம் ரூ5000  கணவருக்கு ஜீவனாம்சம்  வழங்க வேண்டும்... கோர்ட் அதிரடி தீர்ப்பு!

 

மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜையினி பகுதியில் வசித்து வருபவர்  23 வயதான  அமன்குமார்.   இவர் இந்தூரில் வசித்து வரும் 22 வயது நந்தினியை  காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி 2 மாதங்களிலேயே   இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதுகுறித்து நந்தினி தனது   கணவர் வரதட்சணை கேட்டு தன்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் துன்புறுத்தியதாக  புகார் அத்துள்ளார்.

 அமனிடம் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டதில் பதிலுக்கு நந்தினி ஜீவனாம்சம் கேட்டு துன்புறுத்துவதாக  புகார் அளித்தார்.அத்துடன் மனைவி  நந்தினியின் வற்புறுத்தலினால் படிப்பை பாதியில் நிறுத்தியதாகவும், அதனால் தான் தற்போது வேலை இல்லாமல் இருப்பதாகவும் அமன் தெரிவித்துள்ளார்.இருதரப்பு விசாரணையும்  இந்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் நடத்தப்பட்டது

. இந்த  விசாரணையில், நந்தினி போலீசாரிடம் பியூட்டி பார்லர் நடத்துவதாக தெரிவித்துள்ளார். ஆனால்  தான் நீதிமன்றத்தில்  வேலையில்லாமல் இருப்பதாகவும், கணவர்தான் சம்பாதிப்பதாகவும் தெரிவித்தார்.நந்தினி  உண்மைக்கு மாறான குற்றச்சாட்டை முன்வைத்தது உறுதி செய்யப்பட்டது.  இதனையடுத்து, கணவருக்கு மாதம் ரூ.5000 ஜீவனாம்சம் வழங்க வேண்டும் நந்தினிக்கு இந்தூர் குடும்பநல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  இந்த தீர்ப்பு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

மாசி மாதத்துல இத்தனை விசேஷமா... இந்த நட்சத்திர தினங்களை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!