ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் இந்தியாவுக்கு பின்னடைவு... அமெரிக்க வரி விதிப்பால் அதிரடி மாற்றம்!
ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் மூண்டதைத் தொடர்ந்து தள்ளுபடி விலையில் கிடைக்கும் ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதில் இந்தியா ஆர்வம் காட்டி வந்தது. இதன் மூலம் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா எண்ணெய் கொள்முதலில் மும்மடங்கு வளர்ச்சியை எட்டி உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. ஆனால் இந்தியப் பொருட்கள் மீது அமெரிக்கா விதித்த 25 சதவீத வரி உயர்வு காரணமாக தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி கணிசமாகக் குறைந்து 12160 கோடி ரூபாயாகச் சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்காவின் இந்த அதிரடி வரி விதிப்பு நடவடிக்கையால் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதில் இந்தியாவுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக உலக அளவில் ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் வாங்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 2 ம் இடத்திலிருந்து 3 ம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் அரசியல் சூழல்கள் மற்றும் பொருளாதாரத் தடைகள் காரணமாக இந்தியாவின் எரிசக்தித் தேவைகளில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர். வரிச் சுமை அதிகரிப்பால் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றங்கள் வரும் காலங்களில் உள்நாட்டு எரிபொருள் விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!