ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியா வருகிறார்!
ரஷ்ய அதிபர் விளாதிமீர் புதின் டிசம்பர் முதல் வாரத்தில் இந்தியாவிற்கு வருகைப் புரியவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. புதினின் வருகைக்கு முன்பாக ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கே லாவ்ரோ இந்தியாவிற்கு வருகைப் புரிந்து, இருதரப்பு சந்திப்புக்கான ஏற்பாடுகளை மேற்கொள்கிறார்.
நியூயார்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொது அவையின் 80வது அமர்வில் பேசிய லாவ்ரோ, ரஷ்ய அதிபர் புதின் வரும் டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் டெல்லிக்கு செல்லவுள்ளதாகக் குறிப்பிட்டார். இந்த சந்திப்பில்பேசிய அவர், வணிகம், ராணுவ பாதுகாப்பு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுகாதாரம், செய்யறிவு தொழில்நுட்பம், மனிதாபிமான விவகாரங்கள் குறித்தும் இருதரப்பு நலன்கள் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசவுள்ளார்.
ரஷ்யாவில் தொடர்ந்து எண்ணெய்க் கொள்முதல் செய்து வருவதன் காரணமாக இந்தியா மீது கூடுதலாக 25% என மொத்தம் 50% வரிகளை விதித்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் நெருக்கமடைந்து வரும் சூழலில் இந்தச் சந்திப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!